ETV Bharat / entertainment

சல்மான் கான் வீடு முன் துப்பாக்கிச் சூடு சம்பவம்: 2 பேர் கைது - மும்பை குற்றப்பிரிவு போலீசார்! - Salman Khan House Gun shot

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 1:28 PM IST

Salman Khan House Gun shot
Salman Khan House Gun shot

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஐதராபாத் : கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி அளவில் மும்பை பாந்த்ரா பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வசிக்கும் கேலக்சி அபார்மண்டஸ் முன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 4 முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனிடையே, பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் என்பவர் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கொள்வதாக தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவு வெளியிட்ட அன்மோல் பிஷ்னோய், "இது டிரெய்லர் தான், அடுத்த முறை குறி நிச்சயம் தப்பாது" என்று மிரட்டல் விடுத்து இருந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவரை சிசிடிவி காட்சி மூலம் அடையாளம் கண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர்.

குருகிராம் பகுதியை சேர்ந்த விஷால் என்ற கலு, சல்மான் கான் வீடு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் என்றும் கடந்த மார்ச் மாதம் தொழிலதிபர் சச்சின் முன்ஜெல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர். மற்றொரு நபரை தேடும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அடுத்த கட்ட விசாரணை நடத்த மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு பிரிவு போலீசார் விரைந்தனர். இந்நிலையில், நடிகர் சல்மான் கான் வீடு துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சல்மான் கான் வீட்டுக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாகிச் சூடு நடத்தியயதாக சந்தேகிக்கப்படும் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவரை போலீஸார் நேற்று (ஏப். 15) நள்ளிரவில் கைது செய்ததாக தெரிவித்து உள்ளனர். குஜராத்தின் பூஜ் பகுதியில் தங்கி இருந்த இருவரையும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : சல்மான் கான் வீடு முன் துப்பாக்கிச் சூடு: சிசிடிவியில் சிக்கிய முக்கிய குற்றவாளி? குற்றப்பிரிவுக்கு விசாரணை மாற்றம்! என்ன காரணம்? - Salman Khan House Gunshot

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.