ETV Bharat / entertainment

மேடையில் கண்கலங்கிய மாஸ்டர் மகேந்திரன்.. அமீகோ கேரேஜ் நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 7:57 PM IST

Mahendran movie amigo garage: விஜயின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் பிளாஷ் பேக் காட்சியில் இடம் பெற்ற மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் ‘அமீகோ கேரேஜ்’ படம் மார்ச் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தாருங்கள் என தெரிவித்துள்ளார்.

mahendran movie amigo garage
மகேந்திரன் அமீகோ கேரேஜ் படம்

மேடையில் கண்கலங்கிய மாஸ்டர் மகேந்திரன்.. அமீகோ கேரேஜ் நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

சென்னை: இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (மார்ச் 10) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் மகேந்திரன் பேசுகையில், “நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள். கரோனா காலத்தில் சினிமாவை நினைத்துப் பயந்து விட்டேன், என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கவேண்டும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன்.

சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்குப் பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசுகையில், “இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்குப் பிறகு தான், இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம். ஒரு கதை எழுதிவிட்டுக் காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது.

இப்படத்திற்காகப் பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

இதையும் படிங்க: டோன்ட் ஓரி.. டோன்ட் ஒரிடா மச்சி.. - விஷாலின் 'ரத்னம்' படத்தின் புதிய அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.