ETV Bharat / entertainment

டோன்ட் ஓரி.. டோன்ட் ஒரிடா மச்சி.. - விஷாலின் 'ரத்னம்' படத்தின் புதிய அப்டேட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 3:42 PM IST

Rathnam movie song: இயக்குநர் ஹரி இயக்கத்தில், விஷால் நடித்து வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாக இருக்கும் ‘ரத்னம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

'ரத்னம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
'ரத்னம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

சென்னை: 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்குப் பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் 'ரத்னம்' திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஏப்ரல் 26 அன்று 'ரத்னம்' திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட வைப்ரன்ஸ்' 24 நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான Don't worry Don't worry da Machi ('டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி') வெளியிடப்பட்டது. மாணவர்களை இப்பாடலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது, “வருங்கால இந்தியாவுக்கு வணக்கம். இந்த நிகழ்ச்சியின் மேடைக்கு உங்கள் மத்தியிலிருந்து நான் வர காரணம் உங்களில் ஒருவன் நான் என்பதால் தான். கல்லூரியில் படிக்கும்போது கலாச்சாரப் பிரிவின் செயலாளராக இருந்து கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவன் என்ற முறையில் இந்தப் பணி எவ்வளவு கடினமானது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.நீங்கள் தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளீர்கள்.என்றும் உங்களில் ஒருவனாக நான் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், “மாணவர்களாகிய உங்கள் அனைவரையும் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் தருகிறது. நன்றாகப் படித்து, உழைத்து முன்னேறுங்கள். ஏணியைக் கூரையில் போடாமல் வானத்தில் போடுங்கள்.தம்பி விஷால் கடினமான உழைப்பாளி, அவரது உழைப்புக்கு இன்னும் பல தளங்கள் காத்திருக்கின்றன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பாடல் ஆசிரியர் விவேகா, மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். ஏப்ரல் 26 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்” என்றார்.

இயக்குநர் ஹரி பேசியதாவது, "இது எனது 17வது படம், விஷாலுடன் மூன்றாவது படம், தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஆறாவது படம். 'சிங்கம்' உள்ளிட்ட எனது முந்தைய படங்களுக்கு எவ்வாறு அருமையாகப் பாடல்களை வழங்கினாரோ அதைவிடச் சிறந்த பாடல்களை 'ரத்னம்' படத்திற்கு வழங்கியுள்ளார். ஆறு பாடல்களும் மிகவும் அருமையாக வந்துள்ளன.

விஷாலுடன் இணைந்து ஒரு முழு நீள ஆக்க்ஷன் திரைப்படத்தை வழங்க வேண்டும் என்று எண்ணினேன். 'தாமிரபரணி', 'பூஜை' உள்ளிட்ட படங்கள் ஆக்க்ஷன் நிறைந்தவை என்றாலும் அவற்றில் குடும்ப செண்டிமெண்ட் போன்ற இதர விஷயங்களும் இருந்தன. 'சிங்கம்', 'சாமி' போன்ற ஆக்க்ஷன் ததும்பும் திரைப்படமாக' ரத்னம்' இருக்கும். இப்படத்திற்காக விஷால் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு பேசப்படும்” என்றார்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசுகையில், “இன்று வெளியிடப்பட உள்ள பாடலின் தலைப்பே 'டோன்ட் வரி டோன்ட் ஒரிடா மச்சி' ஆகும். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் கரோனா போன்ற பல்வேறு சவால்களைச் சந்தித்து விட்டோம். எது வந்தாலும் நேர்மறையாக இருக்கச் சொல்லும் பாடல் தான் இது. ஏனென்றால் ஒரு விஷயத்தை குறித்து மிகவும் கவலைப்படாமல் நாம் எதிர் கொண்டாலே நமக்கு வெற்றி கிட்டும்.

அதை இந்த பாடல் அழகாகச் சொல்கிறது, உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இப்பாடலுக்காகக் கடினமான நடன அசைவுகளை விஷால் செய்துள்ளார், பாடலைப் பார்த்து ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: “கண்ணான கண்ணே..” டிஸ்சார்ஜ் ஆகிய மறுகணமே மகனுக்காக மைதானத்தில் அஜித்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.