ETV Bharat / entertainment

பாண்டியன் ஸ்டோர் தனம் குடும்பத்தில் சோகம்.. அகால மரணமடைந்த அண்ணன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 3:22 PM IST

Etv Bharat
Etv Bharat

Director Surya Kiran: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதாவின் அண்ணனான இயக்குநர் சூரிய கிரண் காலமானார்.

சென்னை: 48 வயதான சூரிய கிரண், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதால், சென்னை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

சூரியகிரண் சமுத்திரம் திரைப்படத்தில் தங்கையாக நடித்த கல்யாணி என்பவரை திருமணம் செய்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஆவார்.

மௌன கீதங்கள், படிக்காதவன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய மாஸ்டர் சுரேஷ், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் 200 படங்களில் நடித்திருக்கிறார். பிறகு சூரிய கிரண் என்ற பெயரில் தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கியவர்.

தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த சூரிய கிரண் இன்று காலமானார். குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குநராக இரண்டு முறை ஆந்திர மாநில விருதும் (நந்தி அவார்டு) பெற்றவர். இவரது உடல் சென்னையில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: Tenet-க்கு கிடைக்காத ஆஸ்கர் Oppenheimer-க்கு கிடைத்தது எப்படி? 3 முறை நோலனை புறந்தள்ளிய ஆஸ்கர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.