ETV Bharat / bharat

"தமிழக மக்களிடம் இதயப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்"- மத்திய அமைச்சர் ஷோபா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 1:45 PM IST

Shobha Karandlaje apologize to Tamil Nadu people
Shobha Karandlaje apologize to Tamil Nadu people

Shobha Karandlaje apologize: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் காரணம் என மத்திய அமைச்சர் ஷோபா கூறிய கருத்து சர்ச்சையானதை அடுத்து, தான் பேசியதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் 'ராமேஸ்வரம் கஃபே' உணவகத்தில், மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு நடத்தது. இதில் உணவக பணியாளர்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மார்ச் 9ஆம் தேதி அந்த உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய வேளாண் இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே அண்மையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

அதில், "தமிழகத்தில் பயிற்சி பெற்றுவிட்டு, பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே-வில் நடந்த குண்டு வைத்துள்ளனர்" எனப் பேசினார். மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர் உட்பட பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு!

குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ள இந்த கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உள்ளிட்டோர் தங்களது 'X' வலைத்தளப் பக்கத்தில், கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய வேளாண் இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு விவகாரத்தில் தமிழ் மக்களை குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோரி தனது 'X' வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ் சகோதர சகோதரிகளே, நான் யாரையும் தாக்கும் விதத்தில் பேச முற்படவில்லை.

இருப்பினும், என்னுடைய கருத்து பலருக்கு வேதனை அளித்துள்ளது தெரியவருகிறது. அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். கிருஷ்ணகிரி வனப்பகுதியில் மறைமுக பயிற்சி மேற்கொள்ளும் கும்பலை குறித்தே என்னுடைய கருத்து, இருந்தது. மேலும் நான் தமிழ்நாட்டு மக்கள் குறித்து பேசிய கருத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.