ETV Bharat / bharat

இலங்கையில் ஐஐடி கிளை துவக்கம்? ஐஐடி மெட்ராஸ் கிளை தொடங்க உள்ளதாக தகவல்!

author img

By PTI

Published : Feb 11, 2024, 7:33 PM IST

Etv Bharat
Etv Bharat

IIT Madras in Sri Lanka: இந்திய தொழில்நுட்ப கழகமான ஐஐடியின் கிளை விரைவில் இலங்கையில் துவக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி : இலங்கையில் விரைவில் இந்தியப் தொழில்நுட்ப கழகத்தின் கிளை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான முன்மொழிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ரனில் விக்ரமசிங்கே குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், ஐஐடியை இலங்கையில் திறப்பது தொடர்பாக அந்நாட்டு அரசு, மெட்ராஸ் ஐஐடியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அண்மையில் இலங்கை அரசின் உயர் மட்டக் குழு ஐஐடி மெட்ராஸ் கிளைக்கு வந்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கண்டி பகுதியில் ஐஐடியை திறப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்தியா வந்த இலங்கை அரசின் உயர் மட்ட குழு, ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் ஐஐடி அமைவது உறுதியாகும் பட்சத்தில் ஐஐடி மெட்ராசின் இரண்டாவது சர்வதேச கிளை இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஆண்டு தான்சானியாவில் உள்ள ஷன்ஷபிர் பகுதியில் ஐஐடி கிளை தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடஹ்ன் பொறுப்பு இயக்குநராக பிரீத்தி அகல்யம் என்பவர் அறிவிக்கப்பட்டார். மேலும், ஐஐடி இயக்குநராக அறிவிக்கப்பட்ட முதல் பெண் என்ற சிறப்பையும் பிரீத்தி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் இந்தியா - தான்சானியா இடையே ஐஐடி வளாகம் அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்காலிக வளாகம் மூலம் கடந்த நவம்பர் மாதம் முதல் ஐஐடி கிளை தொடங்கப்பட்டது. மேலும், தான்சானியா ஐஐடி மாணவர்களுக்கு நான்கு கால அடிப்படையிலான இளங்கலை மற்றும் முதுகலை Bachelor of Science in Data Science மற்றும் Artificial Intelligence பாடப்பிரிவு அறிவிக்கப்பட்டது.

அதேபோல் அபு தாபியிலும் ஐஐடி டெல்லி கிளை தொடங்குவதற்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு அமீரக அரசுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும், ஐஐடி கிளை தொடங்கப்படும் பட்சத்தில் கடல் தாண்டி ஐஐடி தொடங்கிய மூன்றாவது கிளை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : "நாட்டை கொள்ளையடிப்பது, பிளவுபடுத்துவதே காங்கிரசின் குறிக்கோள்" - பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.