ETV Bharat / bharat

திருப்பதி அருகே கார் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு! - Tirupati accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 10:46 AM IST

Updated : May 27, 2024, 11:04 AM IST

Road accident in Tirupati: ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)

அமராவதி: திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம் எம்.கொங்கரவாரிப்பள்ளி அருகே பூதலாப்பட்டு-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் நெல்லூரில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு காரில் 6 பேர் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாரத விதமாக ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இக்காரில் பயணித்த இரண்டு பேர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, பூதலாப்பட்டு - நாயுடுபேட்டை நெடுஞ்சாலையில் மற்றொரு கார் விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், சி.மல்லாவரம் என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் தடுப்பு சுவரில் மோதிய படி பக்கவாட்டு சாலையில் கார் தாறுமாறாக ஓடியது. இதனால், கார் முழுவதும் தீப்பொறிகள் ஏற்பட்டன. இதில், காரில் இருந்த இரண்டு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதையும் படிங்க: உத்தரகாண்ட், கர்நாடகாவில் அடுத்தடுத்து கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு! - Uttarakhand Accident

Last Updated : May 27, 2024, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.