ETV Bharat / bharat

வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா! விசாரணைக்கு ஆஜராவேன் என உறுதி.. - Prajwal Revanna sexual videos issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 6:15 PM IST

Prajwal Revanna: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் விவகாரத்தில், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு மே.31இல் ஆஜராகுவதாக பிரஜ்வல் ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா புகைப்படம்
பிரஜ்வல் ரேவண்ணா புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நிலையில், தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "கடந்த ஏப்.26 ஆம் தேதி லோக்சபா தேர்தல் முடிந்ததும், பல்வேறு காரணங்களுக்காக என் மீது வழக்குகள் பதியப்பட்டு எஸ்டிஐ அமைக்கப்பட்டது. எனது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்த வழக்குகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம். எஸ்டிஐ எனக்கு நோட்டீஸ் கொடுத்து அதற்கு என் வழக்கறிஞர் மூலம் பதில் அளித்ததை மட்டுமே நான் அறிந்தேன்.

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எனக்கு எதிராக வதந்திகளைப் பரப்பிய பிறகு நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது வாழ்க்கையை முடிக்க அரசியல் சதி நடக்கிறது. அதை நான் எதிர்கொள்வேன்.

கடவுளோடு ஆசீர்வாதமும், குடும்பம், மக்களோடு ஆசீர்வாதமும் எனக்கு இருக்கட்டும். மே.31 ஆம் தேதி காலை சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன் ஆஜராவேன். விசாரணைக்கு ஒத்துழைப்பேன். எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது" என தெரிவித்துள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் பின்னணி என்ன? மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை உண்டாக்கியது.

ஹாசன் தொகுதியில் லோக்சபா தேர்தல் முடிந்த மறுநாள் கடந்த ஏப்.27 ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றதாகவும், அவர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறப்புப் புலனாய்வுக் குழு வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல் கேட்டு இன்டர்போல் ஏற்கனவே ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது.

அதன்படி, சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிறநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த மே.18 ஆம் தேதி கைது வாரண்ட் பிறப்பித்தது. மேலும், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல் காந்தி பேரணியில் சரிந்து விழுந்த மேடை... பீகாரில் பரபரப்பு! - Rahul Gandhi Rally Stage Collapsed

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.