ETV Bharat / bharat

மன் கி பாத் நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்கு கிடையாது - மோடி சொன்ன காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 4:09 PM IST

Maan Ki Baat: 110வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மனதின் குரல் அடுத்த 3 மாதங்களுக்கு நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

மன் கீ பாத் நிகழ்ச்சி
மன் கீ பாத் நிகழ்ச்சி

சென்னை: மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் நிகழ்ச்சி, இன்று (பிப்.26) நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சில நாட்கள் முன்பாகவே, தேர்தல் ஆணையம் மேலும் ஒரு இயக்கமான, என்னுடைய முதல் வாக்கு – தேசத்தின் பொருட்டு என்பதை தொடக்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதன் வாயிலாக, குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டி கொள்ளப்படுகிறார்கள். உற்சாகமும், ஊக்கமும் நிறைந்த தனது இளைஞர் சக்தியின் மீது எப்போதும் பாரதத்திற்கு பெருமிதம் உண்டு. நமது இளைய நண்பர்கள், தேர்தல் நடைமுறைகளில் எந்த அளவுக்குப் பங்கெடுக்கிறார்களோ, அதன் விளைவு தேசத்திற்கு அந்த அளவுக்கு லாபகரமானதாக இருக்கும்.

நானும்கூட முதல்முறை வாக்காளர்களிடத்திலே வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் சாதனை பதிவேற்படுத்தும் எண்ணிக்கையிலே வாக்களியுங்கள். 18 வயது ஆன பிறகு, 18வது மக்களவைக்கான உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதாவது, இந்த 18வது மக்களவையும்கூட இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களின் அடையாளமாக விளங்கும். ஆகையால், உங்களுடைய வாக்கின் மகத்துவம் மேலும் அதிகரித்திருக்கிறது.

பொதுத்தேர்தல்களின் இந்த அமளிக்கு இடையே, இளைஞர்களே, நீங்கள் அரசியல் வழிமுறைகளின் அங்கமாக ஆவதோடு கூடவே, இது தொடர்பாக நடைபெறும் வாதம், விவாதங்கள் தொடர்பாகவும் விழிப்போடு இருங்கள். மேலும், நினைவில் வைத்திருங்கள், என்னுடைய முதல் வாக்கு தேசத்தின் பொருட்டு என்பதை.

விளையாட்டுத் துறையாகட்டும், திரைத்துறையினராகட்டும், இலக்கிய உலகைச் சேர்ந்தவர்களாகட்டும், பிற தொழில் வல்லநர்களாகட்டும் அல்லது நமது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகட்டும், இந்த இயக்கத்தில் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொள்ளுங்கள், நிபுணர்களே முதன்முறையாக வாக்களிக்கும் நமது வாக்காளர்களை ஊக்கப்படுத்துங்கள் என்று அனைத்துத் துறைகளைச் சார்ந்த தாக்க மேற்படுத்துபவர்களிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் கடந்த 110 பகுதிகளாக நாம் இதை அரசின் தாக்கத்திலிருந்து தள்ளி வைத்தே வந்திருக்கிறோம் என்பதே கூட மனதின் குரலின் மிகப்பெரிய வெற்றியாகும். மனதின் குரலில், தேசத்தின் சமூக சக்தி பற்றி பேசப்படுகிறது, தேசத்தின் சாதனைகள் விவாதிக்கப்படுகின்றன. இது ஒரு வகையிலே மக்களின் மக்களுக்காக, மக்கள் வாயிலாக தயார் செய்யப்படும் நிகழ்ச்சியாகும்.

ஆனாலும் கூட, அரசியல் கண்ணியத்தைப் பின்பற்றும் வகையில், மக்களவைத் தேர்தல் என்ற இப்போதைய காலகட்டத்தில், அடுத்த மூன்று மாதங்களுக்கு மனதின் குரலின் ஒலிபரப்பு நடைபெறாது. அடுத்த முறை நாம் உரையாடுவது மனதின் குரலின் 111வது பகுதியாக இருக்கும். அடுத்த முறை மனதின் குரலின் தொடக்கம் 111 என்ற சுபமான எண்ணோடு கூடவே இருக்கும், இதை விட வேறு என்ன சிறப்பாக இருக்க முடியும்?

நீங்கள் எனக்காக ஒரு வேலை செய்ய வேண்டும். மனதின் குரல் வேண்டுமானால் மூன்று மாதங்கள் வரை வராமல் போகலாம். ஆனால், தேசத்தின் சாதனைகள் நின்று போகப் போவதில்லை என்பதால், நீங்கள் மன் கி பாத் ஹேஷ்டேக் என்பதோடு கூட, சமூகத்தின் சாதனைகளை, தேசத்தின் சாதனைகளை, சமூக ஊடகத்தில் தரவேற்றிக் கொண்டே இருக்கவும்.

சில நாட்கள் முன்புதான் ஒரு இளைஞர் நல்லதொரு ஆலோசனையைக் கூறியிருந்தார். அதாவது, மனதின் குரலின் இதுவரையிலான பகுதிகளிலிருந்து சின்னச்சின்ன காணொளிகளை, யூடியூப் ஷார்ட்டுகளாக பகிர வேண்டும் என்று கூறியிருந்தார். ஆகையால், மனதின் குரலின் நேயர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள், நீங்கள் இப்படிப்பட்ட குறும்படங்களை நன்கு பகிரவும். அடுத்த முறை உங்களோடு உரையாடும்போது புதிய சக்தி, புதிய தகவல்களோடு வந்து சந்திப்பேன். நீங்கள் உங்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: கனமழையால் பாதித்த தென்மாவட்ட மக்களுக்கு ரூ.201.6 கோடி நிவாரணம் - அரசாணை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.