ETV Bharat / bharat

இந்திய ராணுவ கண்காட்சி... எல்லையை காக்கும் லோரரின் கேமிரா முதல் என்னென்ன இருக்கு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 3:01 PM IST

20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளையும் துல்லியமாக கண்டறியும் சிசிடிவி கேமரா
20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளையும் துல்லியமாக கண்டறியும் சிசிடிவி கேமரா

cctv camera used at indian border: நாக்பூரில் அடுத்த மான்கபூர் ஸ்டேடியத்தில் நடைபெறும் கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் எல்லை கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தப்படும் லோரரின் சிசிடிவி கேமிரா உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

நாக்பூர்: வளர்ந்து வரும் இந்திய நாட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் இரவு பகலாக எல்லை பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டும், எதிரி நாட்டில் இருந்து வந்த தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி, நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர் என்பது போன்ற தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை நம்மால் தடுக்க முடிவதில்லை.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை கொண்ட பரந்த எல்லை பகுதிகளை இந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து துணிச்சலுடனும், விழிப்புடனும் பாதுகாத்து வருவதன் காரணமாக நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. இந்திய நாடு, பாகிஸ்தான், சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதால் எல்லைப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது.

அண்டை நாடுகளில் இருந்து அடிக்கடி ஊடுருவல் நடைபெறும் நிலையில் கண்காணிப்புப் பணிகளுக்காக எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) மற்றும் ஐடிபிபி ஜவான்கள் எல்லையில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் கொண்ட எல்லை பகுதியை மனிதர்கள் மட்டுமே பாதுகாப்பதென்பது சாத்தியமற்றது.

மேலும் வளர்ந்து வரும் சூழலில் தொழில்நுட்பத்தின் துணை நமக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளதால், பாதுகாப்பிற்கு சிசிடிவி கேமராக்களும் எல்லையை சுற்றி பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும் எதிரிகளை கண்காணிப்பது மட்டுமே போதாத நிலையில், அவர்களின் நிலை குறித்து மேலும் துல்லியமாக தெரிந்துகொள்ள, இந்த தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.

அவ்வாறு தேவைக்கேற்ப புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லோரரின் கண்காணிப்பு சிசிடிவி (நீண்ட தூர கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு) கேமரா, ராணுவ வீரர்களுக்கு அதிக உதவியாக உள்ளது. இந்த சிசிடிவி கேமரா எதிரியை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தும் போது எதிரியின் நிலை எப்படி இருக்கும் என்பதையும் கண்காணிக்கிறது. மேலும் இந்த கேமரா, எங்கு சுடவேண்டும் என்பது குறித்து நம்பகமான தகவல்களையும் வழங்குவதாக கூறப்படுகிறது.

சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரப் பகுதியை கண்காணிக்கும் இந்த கேமரா இரவு பகல் என அனைத்து நேரங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறது. மேலும் 40 கிலோ மீட்டர் தொலைவில் செல்லக்கூடிய வாகனங்கள் பற்றிய தகவல்களையும் இந்த கேமரா வழங்குகிறது. இந்நிலையில் அருகில் உள்ள பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணிக்க, இஸ்ரேலால் உருவாக்கப்பட்டுள்ள (LORROS) எனும் நீண்ட தூர உளவு மற்றும் கண்காணிப்பு அமைப்பு கருவி உபயோகிக்கப்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் எல்லையை பாதுகாப்பது என்பது இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் கடினமான பணிகளில் ஒன்றாக இருந்து வந்த நிலையில், தற்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்திய ராணுவத்தின் கைகள் வலிமையாகவும் திறமையாகவும் மாறியுள்ளன. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பகுதியில் ஊடுருவல் ஓரளவு குறைந்துள்ளது.

இவ்வாறு எல்லையை பாதுகாக்க ராணுவத்தினர் மேற்கொள்ளும் பணியை பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களின் கண்காட்சி நாக்பூரில் உள்ள மான்கபூர் ஸ்டேடியம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் லோரரின் சிசிடிவி கேமராவும் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதனை காண மாணவர் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2023-இல் கொடிகட்டி பறந்த செயற்கை நுண்ணறிவு.. வளர்ச்சியும் எழுச்சியும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.