ETV Bharat / bharat

சுட்டெரிக்கும் வெயிலால் ரெட் அலர்ட் எச்சரிக்கை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன? - Today weather update

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 1:00 PM IST

Updated : Apr 29, 2024, 5:38 PM IST

TODAY WEATHER UPDATE
TODAY WEATHER UPDATE

weather update:மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மே 2ஆம் தேதி வரை மோசமானது முதல் மிக மோசமான வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்: பொதுவாகக் கோடைக் காலத்தில்தான் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்படும் ஆனால் இந்தாண்டு கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலில் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நாட்டில் தமிழகம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும், என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது," நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிக மோசமான வெப்ப நிலை நீடிக்கும். குறிப்பாக மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்க்கண்டில் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மே 1ஆம் தேதி வரை கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்றும், அதன்பிறகு, மே 2ஆம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மோசமானது முதல் மிக மோசமான வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடகம், ஆந்திர மற்றும் கோவா, ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் இன்று முதல் மே 1ஆம் தேதி வரையும், கேரளத்தின் கொங்கன் பகுதிகளில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகமான நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதே போல் வெயிலின் தாக்கம் அதிகமுள்ள பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியில் செல்ல வேண்டிய தேவை இருந்தால், குடை எடுத்துக் கொண்டு, காட்டன் துணி அணிந்து செல்லலாம். கையில் தண்ணீர் பாட்டில் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வெப்ப அலையில் இருந்து தப்புவது எப்படி? கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவர் அட்வைஸ்.!

Last Updated :Apr 29, 2024, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.