ETV Bharat / bharat

2ஜி வழக்கில் மேல்முறையீடு ஏற்பு - ஆ.ராசா, கனிமொழிக்கு புதிய சிக்கல்! - 2G spectrum scam case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 11:28 AM IST

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

2g scam case against A Raja and Kanimozhi: 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

டெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சிபிஐ-யின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் இன்று அறிவித்துள்ளார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இம்மனுவை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2ஜி வழக்கில் தொடர்புடையவர்கள் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தால் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க உள்ளது, இதற்கிடையே, இந்த தேர்தலில் திமுக சார்பில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகவும், ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒத்த வீடியோவால் பறிபோன எம்பி வாய்ப்பு.. திமுக கூட்டணியின் நாமக்கல் வேட்பாளர் மாற்றத்தின் பின்னணி என்ன? - KMDK Namakkal Candidate Changed

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.