டெல்லி : கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் பத்திர முறையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் இதுவரை கட்சிகள் பெற்ற தொகை உள்ளிட்ட தகவல்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
மேலும், ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வெளியிடும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட மார்ச் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் கோரி உள்ளது.
இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட கோரிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எஸ்பிஐ வங்கி பின்பற்றவில்லை எனக் கூறி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த மனு இன்று (மார்ச்.7) பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் - என்.ஐ.ஏ அறிவிப்பு!