ராஜஸ்தான்: லஞ்சம் கேட்ட அலுவலரின் கன்னத்தில் அறைந்த எம்.பி.யின் வீடியோ வைரல்
ராஜஸ்தான்: பிரதாப்கர் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் கூலி தொழிலாளியிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த அலுவலகத்திற்கு சித்தோர்கர் எம்.பி., சந்திர பிரகாஷ் ஜோஷி சென்றார். பின்னர் விசாரித்தபோது லஞ்சம் கேட்டது உண்மை என தெரியவந்ததால், அலுவலரின் கன்னத்தில் எம்.பி., சந்திர பிரகாஷ் ஜோஷி அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST