தமிழ்நாடு

tamil nadu

உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்!

By

Published : May 2, 2023, 3:07 PM IST

உலக புகழ்பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான உலகப் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. சிவபெருமான் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்டவீரட்ட தலங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.

தேவாரப் பாடல் பெற்ற இந்த கோயிலின் சித்திரை வசந்த உற்சவம் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் நாள் திருவிழாவான இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹாரமூர்த்தி பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது.

மகேஷ் குருக்கள் தலைமையிலானோர் பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் தேரினை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுக்க நான்கு மாட வீதிகளையும் வலம் வந்த தேர் நிலையை அடைந்தது.

புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் சித்திரைத்தேர் திருவிழாவில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மற்றும் வெளி மாநில பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details