தமிழ்நாடு

tamil nadu

பெரம்பலூர் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் - பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த பெரம்பலூர்!

By

Published : Jul 7, 2023, 8:04 PM IST

ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

பெரம்பலூர்:பெரம்பலூர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் “மஹா கும்பாபிஷேக விழா"வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் நகரத்தின் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் மாவட்டத்தின் சிறப்புமிக்க கோயிலாகும். மேலும், நினைத்த காரியம் நிறைவேறும் என பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்ற திருக்கோயிலாகும். தற்போது இத்திருக்கோயிலானது புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 5ம் தேதி கணபதி வழிபாடு, விக்னேஸ்வர பூஜை ஆகிய பூஜைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து இன்று (ஜூலை 7) நான்கு கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. மேலும், பக்தி பரவசத்துடன் யாக சாலையிலிருந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் கோபுர கலசங்களுக்கும் மற்றும் மூலவர் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதைத்தொடந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:TNPSC Group 1: குரூப்-1 முதன்மைத் தேர்வு எழுத சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details