தமிழ்நாடு

tamil nadu

"கேப்டனுக்காக எனது உடல் உறுப்புகளை தானமாக தருகிறேன்" - முகநூல் பக்கத்தில் கூலித் தொழிலாளி கண்ணீர் பதிவு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 5:08 PM IST

கேப்டனுக்காக எனது உடல் உறுப்புகளைத் தானமாகத் தருகிறேன் - முகநூல் பக்கத்தில் கூலித் தொழிலாளியின் கண்ணீர் பதிவு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் கண்ணனுக்கு கேப்டன் விஜயகாந்த் என்றால் சிறு வயதில் இருந்து மிகவும் பிடிக்கும் என தெரிகிறது. 

கூலித் தொழிலாளியான இவர் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதைத் தொலைக்காட்சியின் மூலமாகக் கண்ணன் அறிந்துள்ளார்.

இதனை அடுத்து கூலித் தொழிலாளி கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், கேப்டனுக்காக எனது உடல் உறுப்புகளான நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் என எதைவேண்டுமானாலும் தருகிறேன் என்று அழுகையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜயகாந்த்துக்கு உடல் உறுப்புகள் தேவை என்றால் தான் உடனடியாக குவைத் நாட்டில் இருந்து வந்து உடல் உறுப்புகளைத் தருவதாகவும் அதற்காகத் தனது தொடர்பு எண்ணைத் தருவதாகவும் முகநூல் பக்கத்தில் கண்ணன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details