தமிழ்நாடு

tamil nadu

நீண்ட நேரம் பணி செய்வது இதயத்தைப் பாதிக்குமா?

By

Published : Aug 9, 2021, 7:21 PM IST

அலுவலகத்துடன் ஒப்பிடுகையில், மக்கள் வீட்டில் தான் நீண்ட நேரம் வேலை செய்வது தெரியவந்துள்ளது. வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேலாக பணி செய்யும் நபர்களுக்கு, இதய நோயால் இறக்கும் அபாயம் 17 விழுக்காடு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

work
ஓய்வுநேர இதய துடிப்பு

உலக சுகாதார அமைப்பும், சர்வதேச தொழிலாளர் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், " வாரத்திற்கு 35 முதல் 40 மணி நேரம் வேலைசெய்யும் நபர்களுடன் ஒப்பிடுகையில், வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேலாக பணி செய்யும் நபர்கள், இதய நோயால் இறக்கும் அபாயம் 17 விழுக்காடு உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

உங்களின் அன்றாட வாழ்க்கை முறை தான், இதய ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஓய்வுநேர இதயத் துடிப்பு என்றால் என்ன?

ஜெய்ப்பூரில் உள்ள மூத்த எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் மற்றும் கார்டியலஜிஸ்ட் ராகுல் சிங்கால் கூற்றுப்படி, "ஓய்வின்போது இருக்கும் இதயத் துடிப்பு (RHR) அளவு தான், தற்போதைய மற்றும் எதிர்கால ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய குறி காட்டியாகும்.

நீண்ட நேரம் பணி செய்வது இதயத்தைப் பாதிக்குமா

அதனைக் கண்டுபிடிக்கும் செயல்முறையும் மிகவும் எளிது தான். உங்களின் இரண்டு விரல்களை நாடித்துடிக்கும் இடத்தில் 60 நொடிகள் வைக்க வேண்டும். அச்சமயத்தில், இதயத் துடிப்பைக் கணக்கிட வேண்டும்.

இதனை எப்போது வேண்டுமானாலும் ஆராயலாம். ஆனால், வாசிப்பது போன்ற செயல்களில் ஆராய்வதை தவிர்ப்பது நல்லது. அச்சமயத்தில், இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் இதயத் துடிப்பைக் கணக்கிடுவது சிறந்தது.

ஓய்வுநேர இதயத் துடிப்பு

சரியான இதயத் துடிப்பு அளவு என்ன?

பொதுவாக இதயத் துடிப்பு 60 முதல் 100 வரை இருக்கும். ஆனால் நாடித்துடிப்பு 60 விநாடிகளில் இருக்கும் போது கணக்கிடுகையில், இதயத் துடிப்பு 80க்கும் மேல் இருந்தால், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு , இதய நோய் அபாயம் இரண்டு மடங்கு அதிகரிக்கிறது.

அதுவே 90க்கும் மேல் இருந்தால், அதன் அபாயம் மூன்று மடங்காக அதிகரிக்கும். இந்த இதயத் துடிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு, உங்களின் உடற்பயிற்சி நேரம் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது" என்றார்.

வீட்டில் தான் நீண்ட நேர வேலை

தற்போது, கரோனா காலகட்டத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அலுவலகத்துடன் ஒப்பிடுகையில், மக்கள் வீட்டில் தான் அதிக நேரம் வேலை செய்கிறார்கள்.

பிரேக் அவசியம்

இது சம்பந்தமாக, ஹைதராபாத்தின் விஐஎன் மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் டாக்டர் ராஜேஷ் வுக்கலா கூறுகையில், " நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்கையில், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 10 முதல் 15 நிமிடம் வரை பிரேக் எடுக்க வேண்டும்.

இதயத் துடிப்பு அளவு முக்கியம்

அப்போது தான், மூளை அதிக கவனத்துடன், திறமையாக செயல்பட உதவும். ஆனால், பலரும் இதனைப் பின்பற்றவில்லை. இதன் காரணமாக மன உளைச்சலை எதிர்கொள்கின்றனர்.

அதிக ஓய்வு இதயத் துடிப்பு ஆபத்து

அதிக ஓய்வு இதயத் துடிப்பு உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம். அதிக வேலை அழுத்தம் , குறைந்த அளவு ஓய்வு காரணமாக, அதிக அழுத்த ஹார்மோன்கள் உடலிலிருந்து வெளியிடப்படுகின்றன.

மன அழுத்த ஹார்மோன்கள் உயர் இரத்த அழுத்தத்தை மறைமுகமாக பாதிக்கின்றன, தூக்கமின்மையை ஏற்படுத்துகின்றன.

அதிக மன அழுத்தம் இதயத்தை பாதிக்கும்
55 மணி நேரத்திற்கு மேலாக பணி செய்யும் நபர்களுக்கு ஆபத்து

உடலில் அழற்சியை உருவாக்குகிறது.அதிகளவில் மன உளைச்சலில் சிக்குவதால் இதய நோய் ஏற்பட்டு, இறுதியில் மாரடைப்பில் முடிகிறது.

அதிக அழுத்தம் காரணமாக, இதயத்தின் தசைகள் அழுத்தமடைகின்றன. வாழ்க்கை முறை, தியானம் , யோகாவை மேம்படுத்துவதன் மூலம் ஒருவர் அதிக ஓய்வெடுக்கும் இதயத் துடிப்பை உறுதிப்படுத்த முடியும்" என்கிறார்.

இதையும் படிங்க:மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details