தமிழ்நாடு

tamil nadu

3 வயதில் நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஆட்சியரின் மகள்!

By

Published : Jun 13, 2022, 9:35 AM IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியின் 3 வயது மகள் 56 நடன முத்திரைகள் மற்றும் 9 நவரசங்கள் செய்து நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

ஆட்சியரின் மகள்
ஆட்சியரின் மகள்

விருதுநகர்மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நேற்று (ஜூன்12) நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சாதனை முயற்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியின் 3 வயது மகள் மீரா அரவிந்தா, 56 நடன முத்திரைகள் (அஸம்யுத, ஸம்யுத, திருஷ்டி, கிரீவா பேதாஸ்) மற்றும் 9 நவரசங்கள் செய்து உலக சாதனை படைத்தார்.

நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி

இச்சிறுமியை சாதனையாளராக உருவாக்கிய குரு செல்வராணி குமார் கௌரவிக்கப்பட்டார். சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மீரா அரவிந்தாவிற்கு நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தென் இந்தியா இயக்குநர் திலீபன் மற்றும் நடுவர்கள் ஆகியோர்கள் வழங்கி அங்கீகரித்தனர். இதனையடுத்து சிறுமிக்கு பல தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகம் - பக்தர்கள் பரவசம்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details