தமிழ்நாடு

tamil nadu

'அமைச்சர் இதுபோன்று பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்' - தமிமுன் அன்சாரி

By

Published : Feb 10, 2020, 11:33 PM IST

விருதுநகர்: கலவரங்களை உருவாக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

minister-should-stop-talking-like-this-thamim-ansari-demands
minister-should-stop-talking-like-this-thamim-ansari-demands

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேவுள்ள சம்மந்தபுரம் பகுதியில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்களாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இக்கருத்தை பலமுறை சட்டப்பேரவையில் நான் பேசியுள்ளேன். தற்போது அவர் அதனை தைரியமாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதற்கு எங்களது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இந்தியா முழுவதிலும் மக்கள் தன்னெழுச்சியாக சாதி மதங்களை மறந்து போராடி வருகின்றனர். இச்சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி மாநில சட்டபேரவையில் தீர்மானம் கொண்டுவந்தது போல் தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்ச்சியாக கலவரங்களை உருவாக்கும் விதமாக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரை அதிமுக தலைமை கண்டித்து, தொடர்ந்து இதுபோன்று பேசி வந்தால் அவரை அமைச்சர் பதவியில் இருக்க நீக்க வேண்டும் என்றார்.

“அமைச்சர் தொடர்ந்து இதுபோன்று பேசிவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்”

மேலும், வருகிற 14ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளனர். இந்த பட்ஜெட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் வகையில் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 'காவிரி சமவெளி வேளாண் மண்டல அறிவிப்பு சட்டமாக்க வேண்டும்' - பழ. நெடுமாறன்

Intro:விருதுநகர்
10-02-2020

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்ச்சியாக கலவரங்களை உருவாக்கும் விதமாக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து இதுபோன்று அவர் பேசி வந்தால் அவரை அமைச்சர் பதவியில் இருக்க நீக்க வேண்டும் - மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கோரிக்கை

Tn_vnr_01_thamimun_ansari_byte_vis_script_7204885Body:பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்ச்சியாக கலவரங்களை உருவாக்கும் விதமாக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அவரை அதிமுக தலைமை கண்டிக்கவேண்டும் தொடர்ந்து இதுபோன்று அவர் பேசி வந்தால் அவரை அமைச்சர் பதவியில் இருக்க நீக்க வேண்டும் - மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்
சம்மந்தபுரம் பகுதியில் CAA, NRC, NPR விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் எம்எல்ஏவும் மான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் சிஐஏ சட்டத்தைப் பற்றி அறியாமல் ரஜினிகாந்த் பேசி வருகிறார். ரஜினிகாந்த இயக்குவதும் நடிகர் கமலஹாசன் இயக்குவதும் பிஜேபி தான் கமலஹாசன் மூலம் திமுக ஓட்டுக்களையும் ரஜினிகாந்த் மூலம் அதிமுக வடுக்களையும் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிஜேபி செயல்பட்டு வருகிறது என பேசினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்களாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த கருத்தை பலமுறை சட்டசபையில் நான் பேசியுள்ளேன். தற்போது தைரியமாக அறிவித்துள்ளார். இதை வரவேற்கிறோம் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பு ஹைட்ரோகார்பன் இடுப்பு என சூறையாட திட்டமிட்ட சூழ்நிலையில் முதல்வர் வருடைய இந்த துணிச்சலான அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். மத்திய அரசு கொண்டு வரக்கூடிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இந்தியா முழுவதிலும் மக்கள் தன்னெழுச்சியாக ஜாதி மதங்களை மறந்து போராடி வருகின்றனர் இந்த தன்னெழுச்சியான போராட்டம் 50 நாட்களை கடந்து போராடி வருகின்றனர் மக்களுக்காகத்தான் சட்டங்கள் மக்கள் இந்த சட்டங்களை விரும்பாத போது இதுபோன்ற சட்டங்களை இயற்றுவது எப்படி நேர்மையாக இருக்க முடியும். CAA சட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் வீரர்களையும் ஈழத்தமிழர்களையும் ஏற்றுக் கொள்வோம் என்ற சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் இல்லாட்டி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தை மாற்றி அமைப்பதால் இதில் சில ஆபத்துகள் உள்ளது ஆகையால் அந்த சட்டத்தை நாங்கள் எதிர்கிறோம். NRC சட்டம் அசாமில் அமல் படுத்தியதால் விளைவாக 19லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 12 லட்சம் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமை அலங்கோலமாகி விட்ட இந்த NRC சட்டத்தை நாடு முழுவது மக்கள் எதிர்த்ததை அடுத்து NRC சட்டத்தில் மௌனம் காத்தவர்கள் NPR சட்டத்தில் அந்த ஆறு கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் என கூறுகின்றனர். கொல்லைப்புறம் வழியாக NPR சட்டத்தை கொண்டு வரும் சட்டததை மக்கள் எதிர்ந்து போராடி வருகின்றனர். இந்த சட்டத்தை அமல்படுத்த கூடாது என மேற்குவங்கம், கேரளா , புதுச்சேரி மாநிலங்களில் சட்டபேரவையில் சட்டம் இயற்றியது போல் தமிழக அரசும் சட்டபேரவையில் சட்டம் இயற்ற வேண்டும். நடிகர் விஜய் டெல்லியில் உள்ளவர்கள் அனுசரித்துப் போகாததால் அவர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. அவர்களை அனுசரித்துப் போவதால் ரஜினிகாந்த் வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. நெய்வேலியில் நடிகர் விஜய் படம் சூட்டிங் நடைபெற்று வருகிறது இதற்கு முன்பு 16 படங்கள் ஷூட்டிங் நடந்துள்ளது அப்போதெல்லாம் போராடாத பிஜேபி கட்சியினர் இப்பொழுது ஏன் அங்கு சென்று போராடி வருகின்றனர் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்ச்சியாக கலவரங்களை உருவாக்கும் விதமாக அமைச்சர் தொடர்ந்து பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அவரை அதிமுக தலைமை கண்டிக்கவேண்டும் தொடர்ந்து இதுபோன்று அவர் பேசி வந்தால் அவரை அமைச்சர் பதவியில் இருக்க நீக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. வருகிற 14-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளனர் இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க அமைய வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு என கூறினார்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details