தமிழ்நாடு

tamil nadu

ராஜபாளையம் மலைப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள்;போராடி மீட்பு

By

Published : Nov 13, 2022, 1:55 PM IST

திடீர் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்
திடீர் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர் ()

ராஜபாளையம், அய்யனார்கோயில் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவித்த ஏராளமான பொதுமக்களை 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் போராடி மீட்டனர்.

விருதுநகர்:ராஜபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது, அய்யனார் கோயில். இக்கோயிலுக்குச் செல்லும் வழியில் நீரோடை ஒன்று உள்ளது. மழை நேரங்களில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், இந்த ஓடையை கடந்து செல்வது மிக சிரமமான காரியமாகும்.

இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அய்யனார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கும் நீரோடையில் குளிப்பதற்காகவும் சென்று இருந்தனர்.

மாலையில் மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அய்யனார் கோயில் நீரோடையில் வழக்கத்தை விட அதிகமாக நீர்வரத்து ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக கோயில் பகுதி மற்றும் குளிப்பதற்காகச்சென்றவர்கள் அக்கரையிலிருந்து இக்கரைக்கு வர முடியாமல் தவித்தனர்.

இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி பகுதிகளைச்சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அக்கரையில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக கயிறு கட்டி மீட்டனர்.

திடீர் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்

விவரம் குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் வட்டாட்சியர் தலைமையிலான குழு சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டநிலையில், யாரேனும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:கனமழை எதிரொலி: 8 விமான சேவைகள் ரத்து

ABOUT THE AUTHOR

...view details