தமிழ்நாடு

tamil nadu

மாணிக்கம் தாகூர் பற்றிய சர்ச்சை பேச்சு; ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய கோரிக்கை

By

Published : Sep 23, 2019, 6:26 PM IST

விருதுநகர்: மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

rajendra-balaji

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த 21ஆம் தேதி அதிமுக சார்பில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

மாணிக்கம் தாகூர் பற்றிய சர்ச்சை பேச்சு

இந்த நிலையில், மாணிக்கம் தாகூர் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறி காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர், அவரை கைது செய்ய வலியுறுத்தி விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலர் ராஜா சொக்கர் தலைமையில் சாத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்

அப்போது மாவட்ட செயலாளருடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை காவல் துறையினர் தடுத்த நிலையில், காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க...

‘ராஜேந்திர பாலாஜி ஒரு மங்குனி அமைச்சர்’ - விருதுநகர் எம்.பி காட்டம்!

Intro:விருதுநகர்
23-09-19

பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பற்றி அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு

Tn_vnr_03_police_complaint_rajendrabalaji_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பற்றி அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் சாத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது

விருதுநகர்மாவட்டம் சாத்தூரில் கடந்த 21.09.2019 அன்று பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது இந்த விழாவில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூரை பற்றி அவதூறாக பேசியதாக கூறி அமைச்சரை கண்டித்தும் அவரை கைது செய்யவலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலர் ராஜா சொக்கர் தலைமையில் சாத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது அப்போது மாவட்ட செயலாளர் உடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் பின்பு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து திரும்பிச் சென்றனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details