ETV Bharat / state

‘ராஜேந்திர பாலாஜி ஒரு மங்குனி அமைச்சர்’ - விருதுநகர் எம்.பி காட்டம்!

author img

By

Published : Sep 23, 2019, 3:59 PM IST

விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மங்குனி அமைச்சர் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூர் விமர்சித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அமெரிக்க சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சுற்றுப்பயணம் முடிந்தது முதல் எதிர்க்கட்சி தலைவர்கள், ராகுல் காந்தி என அனைவரையும் தரக்குறைவாகப் பேசி வருகிறார். அவரைப் போல் எங்களால் பேச முடியாது.

விருதுநகர் எம்.பி

சிவகாசி மக்களை அவரிடமிருந்து காக்க வேண்டும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாவடக்கத்துடன் நடத்துகொள்ள வேண்டும். அவர் ஒரு மங்குனி அமைச்சர். வெள்ளை அறிக்கை கேட்டால் பச்சை அறிக்கை தருவதாக மங்குனி அமைச்சர் கூறுகிறார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டின் இரு தொகுதி மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.

Intro:விருதுநகர்
23-09-19

சிவகாசியின் அசிங்கமாக திகழ்கிறார்
மங்குனி மந்திரி - பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்ட மாநிலங்களவை உறுப்பினர் கேலி

Tn_vnr_01_mp_manikam_thaqur_byte_vis_script_7204885Body:சிவகாசியின் அசிங்கமாக திகழ்கிறார்
மங்குனி மந்திரி - பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்ட மாநிலங்களவை உறுப்பினர் கேலி

தற்போது வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டத்திற்கு என்ன கொண்டு வந்தார் என எம்பி கேள்வி.

அமெரிக்கா சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது தெரியவில்லை சுற்றுப் பயணம் முடிந்தது முதல் எதிர்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கத் தாகூர் என அனைவரையும் தர குறைவாக பேசி வருகிறார் அவரைப் போல் எங்களால் பேச முடியாது அமெரிக்காவில் என்ன சாப்பிட்டர் அதன் விளைவாக இப்படி பேசுகிறாரா? என அவரை பரிசோதனை செய்ய வேண்டும் சிவகாசி மக்களை அவரியிடம் இருந்து காக்க வேண்டும். திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் பாதாள சாக்கடை பணிகள் முறையாக நடைபெற அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி தடையாக உள்ளார். சிவகாசியின் அசிங்கமாக திகழ்கிறார் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையாக ராஜேந்திரா பாலாஜி உள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாவடக்கத்துடன் நடத்து கொள்ள வேண்டும்
ஜல் சக்தி திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மோசடி நடப்பதாகவும் அதற்கு ராஜேந்திர பாலாஜி உடந்தையாக இருப்பதாகவும் அதை மோடியின் பார்வைக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் எம்பி பேட்டி.

வெள்ளை அறிக்கை கேட்டால் பச்சை அறிக்கை தருவதாக மங்குனி மந்திரி கூறுகிறார் என கேலி செய்தார். சாத்தூரில் கடந்த 21ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் எம்பி மாணிக்கதாகூர் பற்றி தரகுறைவாக பேசியது குறித்து நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகார் அளிக்க இருப்பதாக எம்.பி மாணிக்க தாகூர் கூறினார்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில் இரு தொகுதி மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 3 தொகுதியிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் மேலும் அதிமுகவை சேர்ந்த ஆர்.பி. உதயகுமார் மா.பா.பாண்டியராஜன் போன்ற அமைச்சர்கள் விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள்
அவர்களை வேறு மாற்ற காரணமானவர் கே.டி.இராஜேந்திர பாலாஜி தான் என எம்.பி மாணிக்கம் தாகூர் சாடினார். மேலும் கீழடி அகழ்வாய்வு முழுமையாக நடத்தப்பட வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என கூறினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.