தமிழ்நாடு

tamil nadu

முகக்கவசமின்றி வெளியே வந்தால் அபராதம்!

By

Published : Apr 18, 2020, 10:13 AM IST

விழுப்புரம்: முகக்கவசமின்றி வெளியே வந்தால் ரூ 500 அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

vilupuram district collector warned to people if they came without masks imposed 500 rupees fine
vilupuram district collector warned to people if they came without masks imposed 500 rupees fine

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதூரை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய - மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வருவதற்கு முன்பு தற்பாதுகாப்பு, பொதுசுகாதாரத்துக்காக கண்டிப்பாக முகக்கவசம் பயன்படுத்த வேண்டும்.

கடைகளில் விற்கப்படும் முகக்கவசங்களையோ அல்லது தாங்களாகவே வீட்டில் பருத்தித் துணியால் தயாரித்த சாதாரண முகக்கவசங்களையோ பயன்படுத்தலாம்

அரசு அறிவுறுத்தலையும் மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அபராதம் வாங்கிவிட்டு முகக்கவசம் வழங்கும் மாநகராட்சி அலுவலர்கள்!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details