தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரத்திலுள்ள தங்கும் விடுதிகளுக்கு கலெக்டர் விடுத்த எச்சரிக்கை!

By

Published : Aug 4, 2022, 7:24 PM IST

ஆட்சியர்
ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்மாவட்ட ஆட்சியர் இன்று (ஆக.4) ஒரு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக் குறிப்பில் 'தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

அத்துடன் மேலும் அவர், 'குழந்தைகள், மகளிர், முதியோர் விடுதி மற்றும் காப்பகங்கள் முறையாகப்பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். மேலும், பதிவு செய்யாதவர்களும் புதுப்பிக்கத்தவறியவர்களும் வரும் 31ஆம் தேதிக்குள் உரிய இணையதளத்தில் பதிந்திட வேண்டும். தவறும்பட்சத்தில் விடுதி நிர்வாகிகள் மற்றும் காப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குறைந்த வாடகையில் வழங்கிடும் டிராக்டர்களை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details