தமிழ்நாடு

tamil nadu

'குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு' - ஆர்.ஜி.ஆனந்த் தகவல்

By

Published : Jan 3, 2020, 9:42 AM IST

விழுப்புரம்: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் குற்றங்கள் முழு அளவில் தடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருவதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

NCPCR member R.G. Anand press meet
NCPCR member R.G. Anand press meet

குழந்தைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் முன்னிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மாநில மற்றும் மாவட்ட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜி.ஆனந்த், 'தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பல்வேறு விதமான கூட்டங்களை நடத்தி உள்ளோம். விழுப்புரத்தில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தினால் அது கடைக்கோடி மக்களையும் சென்றடையும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். விழுப்புரத்தை முன்மாதிரியான மாவட்டமாக மாற்றுவதே எங்கள் இலக்கு.

ஆர்.ஜி.ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சேர்ந்து குழந்தைகள் மீதான குற்றங்களை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளது. குழந்தைகள், பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் யோசிக்கும் அளவுக்கு எங்களது நடவடிக்கைகள் இருக்கும்.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களில் 14,500 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் சரியான அலுவலர்களை அமைத்துக் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி' என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

குழந்தைகளை காக்கும் புதுக்கோட்டை காவல்துறை -ஆர்.ஜி. ஆனந்த்

Intro:விழுப்புரம்: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் குற்றங்கள் முழு அளவில் தடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருவதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் R.G.ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Body:குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் R.G.ஆனந்த் முன்னிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மாநில மற்றும் மாவட்ட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டதின்போது செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் R.G.ஆனந்த்.,

"தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பல்வேறு விதமான கூட்டங்களை நடத்தி உள்ளோம்.

விழுப்புரத்தில் இருந்து எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தினால் அது கடைகோடி மக்களையும் சென்றடையும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். விழுப்புரத்தை முன்மாதிரியான மாவட்டமாக மாற்றுவதே எங்கள் இலக்கு.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சேர்ந்து குழந்தைகள் மீதான குற்றங்களை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளது. குழந்தைகள், பெண்கள் மீது பாலியல் தொந்தரவு செய்பவர்கள் யோசிக்கும் அளவுக்கு எங்களது நடவடிக்கை இருக்கும்.




Conclusion:பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கடந்த மூன்று மாதங்களில் 14,500 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் சரியான அதிகாரிகளை அமைத்துக் கொடுத்த முதல்வருக்கு நன்றி" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details