ETV Bharat / state

குழந்தைகளை காக்கும் புதுக்கோட்டை காவல்துறை -ஆர்.ஜி. ஆனந்த்

author img

By

Published : Oct 19, 2019, 9:29 PM IST

புதுக்கோட்டை: தேசிய அளவில் 19 மாநிலங்களுக்கு நேரடியாக சென்று குழந்தைகள் தொடர்பாக 5,000 குறைகள் கேட்டறியப்பட்டு, அவற்றில் 4,500 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜி. ஆனந்த்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்தவதை தடுக்க பயன்படும் வழிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பெற்றோர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், 'இதுவரை தேசிய அளவில் 19 மாநிலங்களுக்கு நேரடியாகச் சென்று குழந்தைகள் தொடர்பாக 5,000 குறைகள் கேட்டறியப்பட்டு, அதில் 4,500 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையினரின் செயல்பாடுகள் மக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தை திருமணம் தொடர்பான சம்பவங்கள் நிகழும் போது அதற்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்களின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஏனெனில், இளம் வயதில் உள்ள குழந்தைகளை மீண்டும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுத்துவதை தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

குழந்தைகளை காக்கும் புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்டு தற்காலிகமாக தங்க வைக்கக்கூடிய வகையில் தற்காலிக குழந்தைகள் காப்பகம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இத்துறை சார்ந்த அலுவலர்கள் குழந்தைகள் நலனை நன்கு உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டியது அவர்களின் கடமை' என்று அவர் கூறினார்.

Intro:Body:புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று குழந்தைகள் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தொடர்புடைய துறையின் மூலம் தடுத்திட பயன்படுத்தப்படும் உத்திகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது.,

இந்தியாவின் எதிர்கால தூண்கலாக விளங்கவுள்ள குழந்தைகளை அனைத்து நிலைகளிலும் சிறப்பானவர்களாக உருவாக்குவதே நோக்கமாக கொண்டு பாரத பிரதமர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை முற்றிலும் தடுத்திடவும், அவர்களின் மேம்பாட்டிற்கு உரிய உதவிகளை அளித்திடுவதை உறுதி செய்யும் வகையில் இதுபோன்று அரசு அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை தேசிய அளவில் 19 மாநிலங்களுக்கு நேரடியாக சென்று குழந்தைகள் தொடர்பாக 5,000 குறைகள் கேட்டறியப்பட்டு, அவற்றில் 4,500 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையினரின்
செயல்பாடுகள் பாராட்டுதழுக்கு உரியதாகும். குறிப்பாக குழந்தைகள் திருமணம் தொடர்பான சம்பவங்கள் நிகழும் போது அதற்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்களின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் அரியாத வயதில் உள்ள குழந்தைகளை மீண்டும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வழக்கு பதிவு முக்கியமாகிறது. குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படாததை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திடவும், குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் தொடர்பாக அணுக வேண்டிய விபரங்கள் குறித்தும், போதிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு தொடர்புடைய அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்டு தற்காலிகமாக தங்க வைக்க கூடிய வகையில் தற்காலிக குழந்தைகள் காப்பகம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய அலுவலர்கள் குழந்தைகள் நலனை பேணிகாக்க வேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்ந்து கொண்டு குழந்தைகள் நலனை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை திகழ செய்ய வேண்டியது அலுவலர்களின் கடமையாகும். இவ்வாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.