தமிழ்நாடு

tamil nadu

செஞ்சிக்கோட்டையில் சிலம்பாட்டமாடி அசத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்

By

Published : Jan 8, 2023, 12:22 PM IST

Etv Bharatசெஞ்சிக்கோட்டையில் மரபு நடை விழா - சிலம்பாட்டம் ஆடி அசத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிலம்பாட்டமாடி அசத்தினர்.

சிலம்பாட்டம் ஆடி அசத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்

விழுப்புரம்:செஞ்சிக் கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 8 நாட்கள் நடைபெற உள்ள மரபு நடை விழா நேற்று( ஜன.7) தொடங்கியது. இந்த விழா மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றுவருகிறது. இந்த விழாவை முன்னிட்டு ஜனவரி 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இலவசமாக கோட்டையை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிலம்பம்பாட்டமாடி அசத்தினார். இந்த விழா மேடையில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், ‘விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி கோட்டையின் வரலாற்றை கூறும் மரபு நடை விழா சிறப்பாக கொண்டாப்பட இருக்கிறது. இந்த நிகழ்வின் மூலமாக செஞ்சி கோட்டையின் வரலாறும் ஆட்சிபுரிந்த மன்னர் ராஜா தேசிங்கு உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

நாம் நம்முடைய பாரம்பரியம், கலாச்சாரத்தினை அறிந்து கொள்வதுடன், தொடர்ந்து கோட்டையை பாதுகாப்பதற்கும் வழிவகையாக அமைந்திடும். மரபு நடை விழாவின் மூலம், உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல், வெளி மாநில மக்களுக்கும் செஞ்சி கோட்டையின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும்.

செஞ்சி கோட்டையை உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாற்றிட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details