தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎஸ் அலுவலர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு நாளை விசாரணை!

By

Published : Sep 15, 2021, 12:09 AM IST

female-ips-officer-sexual-harassment-case-adjournment-tomorrow
ஐபிஎஸ் அலுவலர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு நாளை விசாரணை!

ஐபிஎஸ் அலுவலர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணையை நாளை( செப். 15) ஒத்திவைத்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்:பெண் ஐபிஎஸ் அலுவலர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

கடந்த 7ஆம் தேதி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் இந்த வழக்கு விசாரணை வராது எனவும், இந்த வழக்கை இங்கு விசாரிக்கக் கூடாது எனவும் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

அந்த விசாரணையின்போது, இந்த வழக்கை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலே விசாரிக்கலாம் எனவும், அதற்கு முழு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்திருந்தார்.

இதற்கு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு நகலை சமர்ப்பித்தால்தான் தாங்கள் வாதாட வசதியாக இருக்கும் என சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர் கோரியதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று(செப். 14) அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்த நிலையில், வழக்கு விசாரணை நாளை(செப். 15) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாலியல் வழக்கு: சாட்டையைச் சுழற்றும் நீதிமன்றம், தீவிரமடையும் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details