தமிழ்நாடு

tamil nadu

முழு ஊரடங்கு - வெறிச்சோடிய விழுப்புரம் மாவட்டம்

By

Published : Jan 16, 2022, 5:32 PM IST

வெறிச்சோடிய விழுப்புரம் மாவட்டம்
வெறிச்சோடிய விழுப்புரம் மாவட்டம் ()

விழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்க நாளான இன்று (ஜன.16) காவல் துறையினர் ஆங்காங்கே சோதனை சாவடிகளை அமைத்து சோதனை செய்தனர்.

விழுப்புரம்: கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமையில் பொது முடக்கம் அறிவித்து தமிழ்நாடு அரசு வார உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜன.16) பொது முடக்க நாளை முன்னிட்டு மாவட்டத்தில் காவல் துறையினர் ஆங்காங்கே சோதனை சாவடிகளை அமைத்து சோதனை மேற்கொண்டனர்.

வெறிச்சோடிய விழுப்புரம் மாவட்டம்

முறையாக அனுமதி பெறாமல் வந்த வாகனங்களுக்கு அபராதம் அளித்துத் திருப்பி அனுப்பினர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க:ஊரடங்கு விதிமுறை மீறல்: ஒரு வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details