தமிழ்நாடு

tamil nadu

வட்டி தொல்லை: 3 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை!

By

Published : Dec 14, 2020, 12:06 PM IST

விழுப்புரம்: கடன் தொல்லையால், 3 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

couple-commits-suicide-with-3-children
couple-commits-scouple-commits-suicide-with-3-childrenuicide-with-3-children

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (38). தச்சு தொழில் செய்துவந்த இவருக்கு, விமலா ஸ்ரீ (32) என்னும் மனைவியும், ராஜஸ்ரீ (8), நித்யஸ்ரீ (5) சிவபாலன் என்னும் மூன்று குழந்தைகளும் இருந்தனர்.

கரோனா காலத்தில் தொழில் மந்தமடைந்த காரணமாக இவர், தனது சொந்த வீட்டின் பத்திரத்தை அடைமானம் வைத்து வங்கி, தனி நபர்களிடம் சுமார் ரூ.40 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

அதையடுத்து தொழிலில் லாபம் இல்லாததால், கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துவந்துள்ளார். இதனால் அவர் விரக்தியில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், நேற்றிரவு (டிச. 13) பூட்டப்பட்ட இவரின் வீடு இன்று காலை வரை திறக்கப்படாமல் இருந்துள்ளது.

சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது, மூன்று குழந்தைகள் உள்பட தம்பதி இருவரும் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளது தெரியவந்தது.

பின்னர் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்த காவலர்கள் உடல்களை மீட்டு, முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லசிவம் தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:கணவன்-மனைவி இடையே தகராறு: திருவள்ளூரில் பெண் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details