ETV Bharat / state

கணவன்-மனைவி இடையே தகராறு: திருவள்ளூரில் பெண் தற்கொலை

author img

By

Published : Dec 13, 2020, 7:06 AM IST

திருவள்ளூர்: பூந்தமல்லியில் கணவன் மனைவி தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்துகொண்டார்.

wife suicide due to family problem in poonamallee
wife suicide due to family problem in poonamallee

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (29), தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். இவருக்கும் இவரது மனைவி சியாமினிக்கும் (27), திருமணமாகி இரண்டு வயதில் தனிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இச்சூழலில் நேற்று வழக்கம்போல் தகராறு ஏற்பட்ட நிலையில் சியாமினி வீட்டில் உள்ள அறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

இதனால் பார்த்திபன் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது சியாமினி தற்கொலையால் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பூந்தமல்லி காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சியாமினியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவருக்கு திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆவதால் இவ்வழக்கு குறித்து ஆர்டிஓ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... சேற்றில் சிக்கிய மாட்டை காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த கதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.