தமிழ்நாடு

tamil nadu

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த கோர விபத்தில் தீக்கிரையான டேங்கர் லாரி மற்றும் கார்

By

Published : Aug 12, 2022, 7:51 PM IST

திண்டிவனம் அருகே இரண்டு பைக் மற்றும் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் பைக் உரிமையாளர் உயிரிழந்த நிலையில் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு கோர விபத்து விழுப்புரத்தில் தீக்கிரையான டேங்கர் லாரி மற்றும் கார்
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு கோர விபத்து விழுப்புரத்தில் தீக்கிரையான டேங்கர் லாரி மற்றும் கார்

விழுப்புரம்:திண்டிவனம் அருகே நேற்று ஜக்காம்பேட்டை என்ற இடத்தில், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் சென்ற கொத்தமங்கலம் கிராமத்தைச்சேர்ந்த ராமதாஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் போது பின்னால் வந்த கார் விபத்துக்குள்ளாகி, கீழே இருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிலைத்தடுமாறி, முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் டேங்கர் லாரியும், காரும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. காரில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினரும், டேங்கர் லாரி ஓட்டுநரும் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
டேங்கர் லாரியும், காரும் கொளுந்துவிட்டு எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுக்‍குள் கொண்டு வந்தனர்.

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு கோர விபத்து விழுப்புரத்தில் தீக்கிரையான டேங்கர் லாரி மற்றும் கார்

இதையும் படிங்க:ராக்கெட் ஏவுவதற்கு குலசேகரப்பட்டினம் மிகவும் பொருத்தமான இடம் எனக்கூறிய இஸ்ரோ தலைவர்

ABOUT THE AUTHOR

...view details