தமிழ்நாடு

tamil nadu

மயக்க மருந்து கொடுத்து மருமகளை வன்புணர்வு செய்த மாமனார் மீது போலீசில் புகார்

By

Published : Sep 5, 2021, 3:23 PM IST

மாமனார் மீது போலீசில் புகார்
மாமனார் மீது போலீசில் புகார்மாமனார் மீது போலீசில் புகார் ()

மகனின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிய மாமனார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

வேலூர் : பொன்னை காவல் நிலையத்திற்கு தாயாருடன் வந்த பெண் ஒருவர், தனது மாமனார் மீது புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ” எனது தாயாருடன் வசித்து வருகிறேன். எனக்கும் ஆந்திர மாநிலம் ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஸ்ரீராமுலு என்பவரின் மகன் சதீஷ்குமாருக்கும், ஸ்ரீராமுலுவின் வற்புறுத்தலின் பேரில் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்பு சதீஷ்குமார் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்பது எனக்கு தெரியவந்தது. இந்த நிலையில், எனது மாமனார் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, என்னைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினார். மயக்கம் தெளிந்து மாமனாரிடம் கேட்டபோது இதுகுறித்து வெளியே கூறினால் உன் குடும்பத்தை கூண்டோடு அழித்து விடுவேன் என மிரட்டினார்

இதே பலமுறை என்னை மிரட்டி ஸ்ரீராமுலு தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டுள்ளார். இதனால், நான் கர்ப்பமடைந்தேன். எனக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மூன்று மாதங்கள் கழித்து என்னயும் குழந்தையும் இரவோடு இரவாக பொன்னை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ஸ்ரீராமுலு சென்றுவிட்டார்.

ஒரு வருடத்திற்கு மேலாகியும் குழந்தையையும் என்னையும் கூட்டிச் செல்லவில்லை. நானாக சென்றாலும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விரட்டிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரினைப் பெற்றுக்கொண்ட காவவல்துறையினர் சம்பவம் நடைபெற்றது ஆந்திர மாநிலம் என்பதால் ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நிர்வாணப் படத்தை வெளியிட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details