தமிழ்நாடு

tamil nadu

கார் ஒர்க் ஷாப்பில் கொள்ளையர்கள் கைவரிசை - போலீஸ் வலைவீச்சு

By

Published : Nov 5, 2019, 8:00 AM IST

வேலூர்: நாட்றம்பள்ளி அருகே நான்கு சக்கர வாகன பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி உட்பட 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை இன்னோவா காரில் வந்த நான்கு திருடர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Theft

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பையான பள்ளி கூட்டுரோடு பகுதியில் வசித்துவருபவர் யாசர். இவர் அதே பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை நடத்திவருகிறார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் வழக்கம்போல் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் காலை 10 மணியளவில் கடைக்குச் சென்று பார்த்தபோது கடைக்குப் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது அடுத்தடுத்து இரண்டு கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

டிப்டாப் கொள்ளையர்கள்

இதனையடுத்து, கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது இன்னோவா காரை கடையின் அருகில் நிறுத்திவிட்டு அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி சென்றது பதிவாகியிருந்தது.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நாட்றம்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் ஒர்க் ஷாப்பில் கொள்ளை
நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதாகவும், காவல் துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்திருக்க முடியும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க...

வேலூர் முன்னாள் மேயர் குத்தாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details