தமிழ்நாடு

tamil nadu

கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

By

Published : Sep 21, 2021, 3:23 PM IST

Updated : Sep 21, 2021, 4:02 PM IST

நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒப்படைத்தனர்.

வேலூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 16ஆம் தேதி திடீர் சோதனை மேற்கொண்டனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கே.சி.வீரமணிக்குத் தொடர்புடைய இடங்களில் சுமார் 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 34 லட்சம் பணம், ஒரு லட்சத்து 80 ஆயிரம் அந்நிய செலாவணி டாலர் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.

ரோல்ஸ் ராய்ஸ், மினி கூப்பர் போன்ற சொகுசு கார்கள் கைப்பற்றப்படாமல் கணக்கில் காட்டப்பட்டது.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட நகை மற்றும் பணம் ஆகியவற்றை இன்று (செப்.21) வேலூர் மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:ஆளுநர் பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமியிடம் கனிமொழி பேசியதும் நடந்ததும் என்ன?

Last Updated :Sep 21, 2021, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details