தமிழ்நாடு

tamil nadu

கடலூரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் - வேலூர் இளைஞர்கள் பயன் பெற ஆட்சியர் அறிவிப்பு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 9:54 PM IST

Indian Army Recruitment: இந்திய ராணுவ ஆள்சேர்ப்புக்கான முகாம் கடலூரில் ஜனவரி 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
கடலூரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

வேலூர்:இந்திய ராணுவ ஆள் சேர்ப்புக்கான முகாம் கடலூரில் ஜனவரி 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு, இந்திய ராணுவ ஆள் சேர்ப்புக்கான முகாம் ஜனவரி 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க ஆர்வமுள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 0416-2290042 என்ற எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்திய ராணுவ ஆள் சேர்ப்புக்கான முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சுருளிமலை ஐயப்பன் கோயிலில் உற்சவ விழா!

ABOUT THE AUTHOR

...view details