தமிழ்நாடு

tamil nadu

Vellore Fire Accident: வேலூர் சர்க்கரை ஆலையில் தீ விபத்து - சுமார் ரூ.1.50 கோடி மதிப்புடைய பொருட்கள் சேதம்!

By

Published : Jul 5, 2023, 7:06 PM IST

Updated : Jul 5, 2023, 10:43 PM IST

வேலூர் மாவட்டம், அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.1.50 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

Etv Bharat
Etv Bharat

சர்க்கரை ஆலையில் கொளுந்துவிட்டு எரிந்த தீ - சுமார் ரூ.1.50 கோடி இழப்பு

வேலூர்: கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திடீரென இன்று (ஜூலை 5) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தினால், மளமளவென எரிந்த நெருப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

வெல்டிங் பணியின் போது ஏற்பட்ட விபரீதம்:வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த அம்முண்டி பகுதியில் அரசுக்குச் சொந்தமான கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலையில் கரும்பு சக்கைகளை மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக கன்வேயர் பெல்ட் பயன்படுத்தப்படும். கன்வேயர் பெல்ட் பகுதியில் இன்று(ஜூலை 5 புதன்கிழமை) மாலை 4 மணியளவில் பராமரிப்புக்காக வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக வெல்டிங்கிலிருந்து தீப்பொறி கன்வேயர் பெல்ட்டின் மீது பட்டு தீப்பிடிக்கத் தொடங்கியது.இதனைத்தொடர்ந்து, தீ வேகமாகப் பரவி மின்சார ஒயர்கள், கன்வேயர் மற்றும் முழுவதுமாக விறுவிறுவென பரவியது.

இதனிடையே, தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர். மேலும், காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கிருந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இதனால், தீ முழுவதுமாக பரவாமல் தடுக்கப்பட்டது.

போலீசார் விசாரணை: இந்த தீ விபத்தில் சுமார் ரூ.ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருப்பதாக சர்க்கரை ஆலை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் மிகப்பெரிய விபத்தும், உயிர், பொருட்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்து திருவலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவலத்திலுள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு சக்கைகளை மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துக் செல்வதற்காக பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் பராமரிப்புக்காக வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது, வெல்டிங்கிலிருந்து தீப்பொறி தெறித்து கன்வேயர் பெல்ட்டில் விழுந்தது. இதைத்தொடர்ந்து, கன்வேயர் பெல்ட்டில் பிடித்த தீயானது வேகமாக மின்சார வயர்கள், கன்வேயர் முழுவதற்கும் பரவி பெரும் தீ விபத்தாக மாறியது. இதையடுத்து, தொழிற்சாலையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு: இதுகுறித்து சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். தற்போது ஆலை உற்பத்தி இல்லாததால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. இதுகுறித்து சர்க்கரை ஆலையின் தலைவர் ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கன்வயர் பெல்டில் வெல்டிங் செய்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர், தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீயில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றார்.

இருப்பினும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கரும்பு அரவை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் இந்த சர்க்கரை ஆலைதான் மின் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருப்பதாக சர்க்கரை ஆலை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் மிகப்பெரிய விபத்தும், உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மேட்டூர் - வெளியேறும் சாம்பல்: சுவாசக் கோளாறால் தவிக்கும் மக்கள் - கண்டுகொள்ளுமா அரசு?

Last Updated : Jul 5, 2023, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details