வேலூர்:வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கல் புதூர் பகுதியில் விநாயகமூர்த்தி (45) என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இரும்பு கழிவுகள் மற்றும் கண்ணாடிகளை நேற்று இரவு (நவ.3) தன் கடையின் அருகே தீ வைத்து எரித்துள்ளார். அப்போது தீயிலிருந்து திடீரென ஒரு பொருள் வெடித்து விநாயகமூர்த்தி கண் மற்றும் வயிறு பகுதியில் விழுந்ததில் விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வெடித்து சிதறிய பழைய இரும்பு கழிவுகள் - ஒருவர் உயிரிழப்பு... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
Vellore news: காட்பாடி அருகே இரும்பு கழிவுகளை தீ வைத்த போது, திடீரென கழிவுப் பொருட்கள் வெடித்து சிதறியதில் இரும்புக்கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Published : Nov 4, 2023, 6:19 PM IST
|Updated : Nov 4, 2023, 6:34 PM IST
இதுகுறித்து காட்பாடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரும்பு கழிவுகளை தீ வைத்து எரித்த போது, நிகழ்ந்த இச்சம்பவத்தில் பழைய இரும்பு கடை உரிமையாளர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: தேனியில் கெட்டுப்போன ஆவின் பால் விற்பனையா? கடை ஊழியர்களிடம் பொது மக்கள் வாக்குவாதம்!