தமிழ்நாடு

tamil nadu

'விவசாயிகள் தான் லாபம் அடைகின்றனர் நாங்கள் நஷ்டம் தான் அடைகிறோம்'...வேதனை தெரிவிக்கும் கரும்பு வியாபாரிகள்!

By

Published : Jan 13, 2021, 4:49 AM IST

வேலூர்: கட்டிற்கு 50 ரூபாய் வரை நஷ்டத்துடன் தான் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கும் கரும்பு வியாபாரிகள், விவசாயிகள் தான் லாபம் அடைகின்றனர் நாங்கள் நஷ்டம் தான் அடைகிறோம் என வேதனை தெரிவிக்கின்றனர்.

கரும்பு வியாபாரிகள்
கரும்பு வியாபாரிகள்

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொங்கல் வியாபாரம் கலைகட்ட தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேதாஜி மார்கெட்டில் நேற்று (ஜன. 12) முதல் பொங்கல் சிறப்பு வியாபாரம் தொடங்கியது.

பொங்கல் பாணை, கோல மாவு, கரும்பு, மஞ்சல், போன்றவை பொங்கலன்று அதிகம் விற்பனை ஆகக்கூடியவை. கடந்த ஆண்டு தொடங்கி இன்று வரை பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலருக்கும் வேலை இழப்பு, வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு விற்பனை மந்தமாகவே காணப்படுகிறது.

கோல மாவு, மஞ்சல் போன்ற சில்லரை பொருள்களின் விற்பனை எப்போதும் போன்று சீராக தான் உள்ளது. பொங்கல் பாணையை பொருத்துமட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அளவு சற்று குறைவாகவே காணப்படுகிறது.

மேலும், புயல் காரணமாக பெய்த தொடர் மழையினால் பாணைகளை சூளையில் வைத்து சூடேற்றுவது கடினமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர் பாணை செய்பவர்கள். மேலும் இது போன்ற காரணங்களால் பாணையின் விலை கடந்த ஆண்டைவிட 10 ரூபாய் கூடுதலாகவே விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் என்றாலே நம் நினைவிற்கு வருவது கரும்பு தான். இதன் விற்பனையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் கரும்பு வியாபாரிகள். இது குறித்து வேலூரில் கரும்பு விற்பனை செய்து வரும் கடலூரைச் சேர்ந்த கரும்பு வியாபாரி சண்முகம், "கடந்த இண்டு கரும்பை விவசாயிகளிடம் இருந்து ஒரு கட்டு 230 முதல் 240 ரூபாய்க்கு வாங்கி சந்தையில் 150 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். அதே போன்று இந்த ஆண்டு ஒரு கட்டு 260 முதல் 380 ரூபாய்க்கு வாங்கி சந்தையில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.

வேதனை தெரிவிக்கும் கரும்பு வியாபாரிகள்

கட்டிற்கு 50 ரூபாய் வரை நஷ்டத்துடன் தான் விற்பனை செய்து வருகிறோம். விவசாயிகள் தான் லாபம் அடைகின்றனர். நாங்கள் நஷ்டம் தான் அடைகிறோம். அரசாங்கம் பொங்கல் பரிசாக கரும்பு கொடுத்ததே இதற்கு காரணம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details