தமிழ்நாடு

tamil nadu

பேஸ்புக்கில் சிறுமி புகைப்படம்... மிரட்டிய முன்னாள் அதிமுக நிர்வாகி கைது!

By

Published : Aug 3, 2021, 7:42 PM IST

திருமணத்திற்கு சம்மதிக்காததால் சிறுமியின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டு மிரட்டிய முன்னாள் அதிமுக நிர்வாகியை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

fb
பேஸ்புக்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (27). அதிமுகவின் குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக இருந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியை கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் கௌதமிடம் பேசக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதையறிந்த கௌதம், சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று தன்னுடன் திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார்.ஆனால், சிறுமியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை‌.

இதனால் ஆத்திரமடைந்த கௌதம், சிறுமியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கௌதமை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் கட்சியின் பெயருக்கு கலங்கம் விளைவித்ததாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி கைது

ABOUT THE AUTHOR

...view details