தமிழ்நாடு

tamil nadu

'அண்ணாமலை திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்'

By

Published : Apr 14, 2023, 2:58 PM IST

Updated : Apr 14, 2023, 5:38 PM IST

திமுக அலுவலகத்தில் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ’பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார் என்பது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்’ என்று கூறினார்.

“அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டாண்ட்”- நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் கூறினார்.
“அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டாண்ட்”- நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் கூறினார்.

வேலூர்:டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு, வேலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு, திமுக பொதுச்செயலாளரும் மாநில நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அமைச்சர் துரைமுருகன் பேட்டி

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'கடந்த ஆட்சியாளர்கள் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. தற்போது தமிழ்நாடு அரசு காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு, 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. காவிரி - தெற்கு வெள்ளாறு வழியாக குண்டாற்றை இணைக்கிறோம். காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்' என்று கூறினார்.

அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன், 'பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார் என்பது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்' என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகர மேயர் திருமதி சுஜாதா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் முழு உருவச் சிலைக்கு, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார்.

மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:அனைத்து சாதியினரும் முன்னேற வேண்டும் என்பதே 'மனித நேயம் அறக்கட்டளை' நோக்கம்: சைதை துரைசாமி

Last Updated :Apr 14, 2023, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details