தமிழ்நாடு

tamil nadu

குடியாத்தம் பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு ரத்து

By

Published : Jul 24, 2020, 4:58 PM IST

வேலூர்: குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த எட்டு நாள் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

கரோனா வைரஸ் தொற்று வேலூர் மாநகரில் அதிகம் பரவி வந்த நிலையில் அண்மை காலமாக குடியாத்தம் நகரிலும் அதிகம் பரவி வருகிறது.

இதுவரை குடியாத்தம் நகரில் மட்டும் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குடியாத்தம் நகராட்சியில் ஏற்கனவே நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் செயல்பட்டன.

இந்நிலையில் நோய் தொற்று பரவலை தடுக்க இன்று ( ஜூலை 24) முதல் ஜூலை 31வரை மொத்தம் 8 நாள்கள் முழு ஊரடங்கிற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது குடியாத்தம் நகர பகுதியில் நோய் பரவல் குறைந்துள்ளதாகவும் இதனால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல் அனைத்து வகை கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details