தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் ஆரவாரத்துடன் நடைபெற்ற எருதுவிடும் விழா!

By

Published : Jan 14, 2021, 8:15 PM IST

வேலூர்: பொங்கல் திருநாளை முன்னிட்டு வேலூரில் ஆரவாரத்துடன் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

வேலூர்
வேலூர்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளுடன் எருதுவிடும் விழா, ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்திருந்தது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 82 கிராமங்களில் எருதுவிடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. அதன்படி, தை பொங்கலை முன்னிட்டு இன்று (ஜன.14) அணைகட்டில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாட்டு உரிமையாளர்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

வேலூரில் நடைபெற்ற எருதுவிடும் விழா


அணைகட்டு பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் முதல் பரிசாக ஒரு லட்சத்தி 5 ஆயிரத்து 555 ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. எருதுவிடும் விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டில் வேளாண் சட்டத்திற்கு எதிராக முழங்கிய மாடு பிடி வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details