தமிழ்நாடு

tamil nadu

குருபகவானுக்கு உகந்த நாள் - திருச்சியில் களைகட்டிய வேட்பு மனுதாக்கல்

By

Published : Feb 3, 2022, 10:50 PM IST

திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர் முண்டியடித்து வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர்.

திருச்சியில் களைகட்டிய வேட்பு மனுதாக்கல்
திருச்சியில் களைகட்டிய வேட்பு மனுதாக்கல்

திருச்சி: திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர் முண்டியடித்து வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. நான்கு கோட்டங்களிலும் கூட்டம் அலைமோதியது.

வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள் என்பதால் திமுக, அதிமுக,அமமுக, விஜய் மக்கள் இயக்கத்தினர், சுயேச்சை வேட்பாளர் என போட்டிபோட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருப்பது போல வேட்பாளர்கள் அனைவரும் வரிசையில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்பதால் நாளையும் களைகட்டும் வேட்புமனு தாக்கல் என எதிர்பார்க்கிறார்கள் மாநகராட்சி அலுவலர்கள்.

இதையும் படிங்க: திருச்சியில் தனித்துப்போட்டியிட்டு இறுமாப்பு காட்டிய இந்திய கம்யூனிஸ்ட்

ABOUT THE AUTHOR

...view details