தமிழ்நாடு

tamil nadu

திருச்சி அருகே மணல் திருட்டு: ஜேசிபி, டிப்பர் லாரி பறிமுதல்

By

Published : Sep 8, 2021, 12:55 PM IST

ஜேசிபி, டிப்பர் லாரி பறிமுதல்
ஜேசிபி, டிப்பர் லாரி பறிமுதல் ()

திருச்சி சத்திரப்பட்டி குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி, டிப்பர் லாரியை தனிப்படையினர் பறிமுதல்செய்து மணல் திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடிவருகின்றனர்.

திருச்சி:மணப்பாறை அருகேயுள்ள சத்திரப்பட்டி குளத்தில் நேற்று (செப். 7) காலை மணல் கொள்ளை நடப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் மத்திய மண்டல காவல் துறைத் தலைவரின் தனிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அலுவலர்கள் வருவதைக் கண்ட ஜேசிபி, டிப்பர் லாரி ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய ஜேசிபி, டிப்பர் லாரியைப் பறிமுதல் செய்த தனிப்படையினர் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணை

இது குறித்து மணப்பாறை காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பறிமுதல்செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர் சீத்தப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும், அவர் அந்தப் பகுதியில் தொடர் மண் மற்றும் மணல் திருட்டில் ஈடுபடுபவர் என்பதும் தெரியவந்தது. ராமச்சந்திரன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ரயில் பயணிகளிடம் ஸ்மார்ட் போன்கள் திருடிய வடமாநில இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details