தமிழ்நாடு

tamil nadu

பிறந்த குழந்தை இறப்பு.. செவிலியர்களின் அலட்சியமா?

By

Published : Dec 31, 2022, 10:44 AM IST

திருவெறும்பூர் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் அலட்சியமாக மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்து போனதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

பிறந்த குழந்தை இறப்பு.. செவிலியர்களின் அலட்சியமா?
பிறந்த குழந்தை இறப்பு.. செவிலியர்களின் அலட்சியமா?

திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர்கள் விமலன் - ஸ்ரீநிதி தம்பதி. இந்த நிலையில் திருவெறும்பூர் பகவதிபுரத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்ரீநிதியை பிரசவத்துக்காக அனுமதித்துள்ளனர். அப்போது பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் ரஷ்யா தேவி பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பணியில் இருந்த செவிலியர்களான செண்பகவல்லி மற்றும் லதா ஆகியோர் ஸ்ரீநிதிக்கு பிரசவம் பார்த்ததாகவும், பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அந்த குழந்தை இறந்து விட்டதாக மாலை 6.30 மணிக்கு, சுமார் 3 மணி நேரம் கழித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், செவிலியர்களின் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்துவிட்டது என கூறி பெற்றோரும், உறவினர்களும் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல் துறையினர், மருத்துவமனைக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பிரசவித்த ஸ்ரீநிதி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:ETV Bharat 2022 Roundup: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செய்ததும், செய்யத் தவறியதும்!

ABOUT THE AUTHOR

...view details