தமிழ்நாடு

tamil nadu

"சந்திரயானுக்கும் லூனாவுக்கும் போட்டி என்று சொல்ல முடியாது" - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

By

Published : Aug 19, 2023, 7:43 PM IST

Updated : Aug 19, 2023, 9:39 PM IST

Chandrayaan-3 vs Luna 25: சந்திரயானுக்கும் லூனாவுக்கும் போட்டி என்று சொல்ல முடியாது கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரியான பயணத்தில்தான் தற்போது உள்ளது என்று திருச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சந்திராயன் -3 விண்கலம் வெற்றியை தருமா? - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

திருச்சி: இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் நிலாவும், உலக அமைதியும் என்ற தலைப்பில் மாணவிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "சந்திரயான்-3 விண்கலம் நிலவை நெருங்கி உள்ளது அதே சமயம் நிலாவும் உலக அமைதியும் என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேச உள்ளேன். 1960களில் அமெரிக்க - ரஷ்யா இடையே பனிப்போர் உச்சத்தில் இருந்தது.

தற்போது நிலவை நோக்கிய பயணம் என்பதற்கு விதை போட்டது சந்திரயான்-1. நிலவில் நீரைக் கண்டு பிடித்தது எனவே மீண்டும் அனைவரும் நிலவைத் தாண்டி நிலவின் தென் துருவம் நோக்கிய விண்வெளிப் பயணத்தில் வளைகுடா நாடுகள், ரஷ்ய, அமெரிக்கா, ஜப்பான், கொரியா போன்ற உலக நாடுகள் வர உள்ளன.

இந்த பயணம், உலக நாடுகள் அமைதி மற்றும் முன்னேற்றம் குறித்ததாக இருக்கும். வெப்ப மண்டலங்களான வளைகுடா நாடுகள் எண்ணெய் வளத்தால் மாற்றம் அடைந்து, எப்படி மனிதர்கள் வாழ்வதற்கான மாற்றம் உருவானதோ அதேபோல நிலவிலும் அந்த மாற்றம் நிகழலாம்.

நிலவைச் சந்திரயான் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நிலவைத் தாண்டி, தென் துருவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். பல நாடுகளும் இதற்கான பயணத்தைத் தொடங்கியுள்ளனர். நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரம் மற்றும் பிற மூலப் பொருட்களின் இருப்பு குறித்த நோக்கத்தில் இந்த பயணம் உள்ளது.

அறிவியலில் அடுத்த கட்டமாகப் போவதற்கும், மனிதன் மீண்டும் நிலாவிற்குச் செல்லும் வகையில் இம்முயற்சி அமையும். நிலாவை, விண்வெளியில் பிரிக்கப்பட்ட இன்னொரு கண்டமாக நான் பார்க்கிறேன்.

இந்தியாவைக் கண்டுபிடிக்க வந்த கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்துப் போல, அமெரிக்கா கண்டுபிடிக்கத் தவறிய நிலவில் நீர் உள்ளதை நாம் கண்டுபிடித்து உள்ளோம். எனவே இந்தியா கண்டுபிடித்த இன்னொரு அமெரிக்காவாக நிலவைப் பார்க்கிறேன்.

மேலும் நிலவில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க முன்னெடுப்பில் உள்ளது. அதில் இந்தியாவும் பங்குபெறும். இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டினால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மேலும் வளர்ச்சி அடையும். உலக அமைதிக்கான இடமாக நிலவு இருக்கும். அதில் இந்தியா முன்னோடியாக விளங்கும்.

அனைத்தும் நல்லபடியாக உள்ளது. சந்திரயான் இறங்கக்கூடிய இடம் கரடு, முரடாக இல்லாமல் தரையிறங்க ஏதுவாக பார்த்துள்ளோம். சந்திரயான், லூனா இவற்றிற்கிடையே போட்டி என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரியான பயணத்தில்தான் தற்போது உள்ளது.

இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டின் வேகம் குறைவாக இருந்த போதிலும், வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. எனவே தான் PSLV, GSLV ராக்கெட்டுகளை எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறோம்.

மேலும், சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக இறங்கும் வகையிலும், எதிர்காலத்தில் சந்திரயான்-4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களைப் பத்திரமாகப் பூமிக்கு எடுத்து வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை டூ பெங்களூரு இனி 30 நிமிடத்தில் செல்லலாம்.. சென்னை ஐஐடியின் 'ஹைப்பர்லூப்' திட்டம்!

Last Updated :Aug 19, 2023, 9:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details