தமிழ்நாடு

tamil nadu

செய்தி எதிரொலி: பாலம் கட்ட ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திட்ட வரையறை

By

Published : Dec 21, 2022, 8:46 AM IST

மணப்பாறை அருகே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பாலம் கட்ட ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திட்ட வரையறை செய்யப்பட்டுள்ளது.

செய்தி எதிரொலி
செய்தி எதிரொலி

செய்தி எதிரொலி

திருச்சி: மணப்பாறை அடுத்த கருப்பூர் ஊராட்சிக்குட்பட்ட செவக்காட்டூர் கிராம மக்கள் டிசம்பர் 16-ம் தேதியன்று இறந்து போனவரின் உடலை கழுத்தளவு நீரில் இடுகாட்டிற்கு தூக்கி சென்ற காணொளி குறித்து ஈடிவி பாரத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்த செய்தியின் எதிரொலியாக திருச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மணப்பாறை வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேற்று (டிச. 20) நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், அந்த இடத்தில் பாலம் கட்டுவதற்கு சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திட்ட வரையறை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கழுத்தளவு நீரில் சடலத்தோடு கடக்கும் மக்கள்.. மணப்பாறை அவலம்!

ABOUT THE AUTHOR

...view details