தமிழ்நாடு

tamil nadu

திருச்சி அருகே திமுக வேட்பாளர் கருணாநிதி போட்டியின்றி தேர்வு

By

Published : Feb 6, 2022, 11:05 PM IST

தாப்பேட்டை பேரூராட்சியில் உறுதிமொழி படிவத்தை இணைக்காத அதிமுக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதால், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கருணாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றி பெற்றது தொடர்பான காணொலி
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றி பெற்றது தொடர்பான காணொலி

திருச்சி: தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தாப்பேட்டை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் போட்டியிட, 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் 8ஆவது வார்டில் திமுக சார்பில் கருணாநிதியும், அதிமுக சார்பில் இளங்கோ என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று (பிப்.6) நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அதிமுக வேட்பாளர் இளங்கோ உறுதிமொழி படிவத்தை இணைக்காததால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக 8ஆவது வார்டில் திமுக வேட்பாளர் கருணாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றி பெற்றது தொடர்பான காணொலி

இவரது வெற்றி, வாக்கு எண்ணும் தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய அன்பில் மகேஷ்!

ABOUT THE AUTHOR

...view details